தமிழ் மக்கள் இடும் புள்ளடி இதை நிரூபித்துக்காட்டும்: சம்பந்தன்

Report Print Rakesh in அரசியல்

தமிழ் மக்கள் இடும் புள்ளடி எம்மை விமர்சிப்பவர்கள் வாயடங்கிப் போவார்கள் என்பதை நிரூபித்துக்காட்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதித்துவ கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் இருக்கின்றது என்பதை தமிழ் மக்கள் இந்தத் தேர்தலின் ஊடாக எடுத்துக் காட்டுவார்கள்.

எதிர்வரும் 10ஆம் திகதி 'வீடு' சின்னத்துக்கு நேரே அவர்கள் இடும் புள்ளடி இதை நிரூபித்துக்காட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக பதவிகளில் ஏறியவர்களும், அரசியலுக்கு வந்தவர்களும் மற்றும் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்களும் கூட்டமைப்பின் தலைமையை கண்டபடி விமர்சித்து வருகின்றனர்.

தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினையான இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாணும் முயற்சிகளில் கூட்டமைப்பின் தலைமை நிதானத்துடன் ஈடுபடுகின்றது.

சரியான பாதையில்தான் கூட்டமைப்பு செல்கின்றது. எனவே, எம்மை விமர்சிப்பவர்கள் எதிர்வரும் 10ஆம் திகதிக்குப் பின்னர் வாயடங்கிப் போவார்கள் என்றும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதித்துவக் கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் இருக்கின்றது என்பதை தமிழ் மக்கள் இந்தத் தேர்தலின் ஊடாகவும் எடுத்துக்காட்டுவார்கள்.

எதிர்வரும் 10ஆம் திகதி 'வீடு' சின்னத்துக்கு நேரே அவர்கள் இடும் புள்ளடி இதை நிரூபித்துக்காட்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தத் தேர்தலை இந்த நாடு மாத்திரம் அல்ல, சர்வதேச சமூகமும் பார்த்துக்கொண்டிருக்கின்றது. இதை உணர்ந்து எமது வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.