ஐ.தே.க உட்பட சில கட்சிகள் பொருட்கள், மதுபானம் விநியோகம்?

Report Print Kumar in அரசியல்

தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவுற்ற பின்னரும் ஐ.தே.க உட்பட சில கட்சிகள் இரவோடிரவாக பொருட்கள் மற்றும் மதுபான போத்தல்கள் விநியோகம் செய்தமை தொடர்பில் தனக்கு அறிவிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் தெரிவித்தள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட தாண்டவன்வெளி, ஜோசப்வாஸ் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் இன்று காலை தமது வாக்குகளை பதிவு செய்ததன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

இதன்போதே குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறுகையில்,

முஸ்லிம் பிரதேசங்களில் முஸ்லிம் கட்சிகள் ஆட்சியை கைபற்றும் நிலை இருப்பதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழர்களின் உள்ளூராட்சி சபைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றும்.

அத்துடன் கடந்த 07ஆம் திகதி நள்ளிரவுடன் பிரச்சார பணிகள் நிறுத்தப்பட்டன. ஆனால் 08ஆம் மற்றும் 09ஆம் திகதிகளில் இரவு வேளைகளில் ஐ.தே.க உட்பட சில கட்சிகள் பொருட்கள் மற்றும் மதுபான போத்தல்கள் என்பவற்றை விநியோகம் செய்துள்ளதாக என கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

சில இடங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டிருந்தன. நாங்கள் இனியொரு வன்முறை நிலைக்கு எமது சமூகத்தினை கொண்டுசெல்ல முடியாது என தெரிவிதுள்ளார்.