தமிழ் கட்சிகள் சேர்ந்து செயற்பட வேண்டியது கட்டாயம் : தேர்தலின் பின் சுமந்திரன்

Report Print Shalini in அரசியல்

தெற்கில் மஹிந்த வெற்றி பெற்றுள்ள நிலையில் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி இடையில் தடைப்படக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

நடைபெற்று முடிந்த தேர்தலில் தமிழ் மக்கள் இடைக்கால அறிக்கையை நிராகரித்து வாக்களிக்கவில்லை.

தெற்கில் மஹிந்த வென்றுள்ள நிலையில் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி இடையில் தடைப்படக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே தமிழ் மக்களுக்கு சமஷ்டிதான் தீர்வு என்ற நிலைப்பாட்டில் உள்ள தமிழ் கட்சிகள் கொள்கை ரீதியில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.