மஹிந்தவின் அபார வெற்றிக்கு யார் காரணம்?

Report Print Kamel Kamel in அரசியல்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அடைந்த தோல்விக்கு ஜனாதிபதியும் பிரதமரும் பொறுப்பு சொல்ல வேண்டுமென சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் அழைப்பாளர் பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்...

வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என மக்கள் மூன்றாண்டுகள் எதிர்பார்த்து காத்திருந்த மக்கள் அரசாங்கத்திற்கு தகுந்த பாடம் புகட்டியுள்ளனர்.

இந்த தரப்பினர் எந்தவொரு விடயத்தையும் கேட்கவில்லை.

கடந்த அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் கள்வர்கள் என்றால் அதனை நிரூபித்து தண்டனை விதிக்கப்பட்டிருக்க வேண்டும்.

அவர்கள் கள்வர்கள் மோசடிகாரர்கள்தான், இதனை மக்கள் நம்பினார்கள். எனினும் அவ்வாறானவர்களுடன் அரசாங்கம் இவ்வாறு இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.

சாகல ரட்நாயக்க போன்றவர்கள் இதற்கு பொறுப்பு சொல்ல வேண்டும்.

சாகலவும் தனித்து பொறுப்பு சொல்ல வேண்டியதில்லை, பிரதமரும் பொறுப்பு சொல்ல வேண்டும்.

மேலும் பிரதமருக்கு மட்டுமன்றி ஜனாதிபதிக்கும் ஆணையை வழங்கியிருந்தனர். எனவே, ஜனாதிபதியும் பிரதமரும் இதற்கு பொறுப்பு சொல்ல வேண்டும்.

ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் இல்லை என்றாலும் மக்கள் ஒர் சமிக்ஞையை வழங்கியுள்ளனர்.

ஜனவரி 8 மக்கள் ஆணையை இந்த அரசாங்கம் புறந்தள்ளியுள்ளது என பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

ஆக, மைத்திரி ரணில் அரசின் மீதான வெறுப்பே மகிந்த ராஜபக்சவை மக்கள் மீண்டும் நாடுவதற்கான முக்கிய காரணம் அமைந்திருப்பதாக தென்னிலங்கையின் முக்கிய கட்சிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.