தேர்தல் வெற்றிக்குப் பின் முதல் ஊடக சந்திப்பில் மஹிந்த ராஜபக்ச

Report Print Steephen Steephen in அரசியல்

அரசாங்கத்தை கலைத்து விட்டு பொதுத் தேர்தலை நடத்துமாறு மக்கள் தேர்தல் மூலம் செய்தியை வழங்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற பொதுஜன பெரமுன இன்று கட்சியின் அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார், தொடர்ந்து தெரிவிக்கையில்,

மக்களின் நிலைப்பாட்டுக்கு செவிசாய்த்து, பொதுத் தேர்தலை நடத்த வேண்டும்.

அதேவேளை ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். தேர்தலில் நடுநிலையான செய்திகளை வழங்கியமைக்காக ஊடகங்கள், இணைய ஊடங்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

அத்துடன், ஆயுட்காலம் முடிவடைந்த 3 மாகாணசபைகளின் தேர்தலையும் உடன் நடத்துமாறும் தெரிவித்தார்.