வடக்கு, கிழக்கில் 1000 பௌத்த விகாரைகள் அமைப்பது நல்லிணக்கத்தை குழப்புகின்ற செயற்பாடாகும்

Report Print Dias Dias in அரசியல்

நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் வன்முறையின்றி அமைதியான முறையில் வாக்களிப்பை முன்னெடுத்துள்ளதுடன், கணிசமான வாக்களிப்பை மேற்கொண்டுள்ளமை ஜனநாயகத்திற்கு பலத்தை ஏற்பத்த கூடியதாகவும் காணப்படுகின்றது என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

மத ரீயான மற்றும் நிலையான அபிவிருத்தியின் கீழ் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் 1000 பௌத்த விகாரைகள் அமைப்போம் என்பது நல்லிணக்கத்தை குழப்புகின்ற செயற்பாடாகும்.

வடக்கு, கிழக்கு மாகாணத்தில் பௌத்த மக்கள் மிக குறைவாக வாழும் இடத்தில் பௌத்த விகாரைகள் அமைப்பது எவ்வாறான நல்லிணக்கம் என்பது எமக்கு தெரியவில்லை.

குறித்த மாகாணங்களில் 1000 விகாரைகள் அமைப்பதற்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்ற செய்தி ஐ.தே. க. யின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசாங்கத்தின் ஊடாக இடம்பெற்ற திட்டங்கள்.

இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலமான முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.