மஹிந்தவுக்கு எதிராக ஆறு மில்லியன் மக்கள் வாக்களிப்பு!

Report Print Kamel Kamel in அரசியல்

ஆறு மில்லியன் மக்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக வாக்களித்துள்ளனர் என நிதி, ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டதன் மூலம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்...

மஹிந்தவின் ஆட்சி மீள வரக்கூடாது என ஆறு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் வாக்களித்துள்ளனர்.

கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவிற்கு ஐந்து மில்லியன் மக்கள் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

எனினும் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மஹிந்தவிற்கான ஆதரவு குறைவடைந்துள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது நாம் வழங்கிய வாக்குறுதிகளை உரிய முறையில் உரிய வேகத்தில் அமுல்படுத்தவில்லை என்பதனை இந்த தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் எமக்கு உணர்த்தியுள்ளனர்.

மக்களின் இந்த தீர்மானம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வலுவாக புரிந்துள்ளது.

நாட்டை மீண்டும் அடக்குமுறைக்கு இட்டுச் செல்வதனை தவிர்க்கும் பாரிய பொறுப்பு ஐக்கிய தேசியக் கட்சி உண்டு என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.