மங்களவுக்கு பதிலடி கொடுத்த நாமல்

Report Print Shalini in அரசியல்

ராஜபக்ஸக்களை தாக்குவதை விட்டுவிட்டு நாட்டை அபிவிருத்தி செய்வதில் கவனம் செலுத்துமாறு அமைச்சர் மங்கள சமரவீரவிடம் நாமல் ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்ட மங்கள சமரவீர, “ஆறு மில்லியன் மக்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக வாக்களித்துள்ளனர்” குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் முகமாகநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ டுவிட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ பற்றி அமைச்சர் மங்கள சமரவீர அதிகளவு கவனம் செலுத்துவது அனைவரும் அறிந்தது ஒன்றே.

எனினும், ராஜபக்ஸக்களை தாக்குவதனை விட்டுவிட்டு நாட்டை அபிவிருத்தி செய்வதில் கவனம் செலுத்துமாறு நாமல் கோரியுள்ளார்.

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அதிகளவு சிரத்தை எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.