மகிந்தவை வரவேற்று சம்பந்தன் கருத்து

Report Print Rakesh in அரசியல்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் வெற்றி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கரங்களை மேலும் பலப்படுத்தியுள்ளது. எனவே, அவர் தனது ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு தமிழ்ப் பத்திரிகை ஒன்றிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

தேசிய பிரச்சினை தீர்க்கப்படவேண்டும். இதனைத் தீர்ப்பேன் என்று அவர் ஏற்கனவே சர்வதேசத்துக்கு உறுதியளித்துள்ளார். அந்த வாக்குறுதியை மஹிந்த நிறைவேற்ற வேண்டும். அவரை நாங்கள் வரவேற்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

எந்தக் கட்சியுடன் நாங்கள் கூட்டுச் சேர்வது என்பது பற்றிக் கவனமாக ஆலோசிப்போம். எமது கொள்கைக்கு மாறான கட்சிகளுடன் கூட்டுக்கு இடமில்லை.

தேசிய அரசுக்கும் மகிந்த ராஜபக்‌சவின் கொள்கைக்கும் சம்பந்தமில்லை. தேசிய அரசு தனது கொள்கையின் அடிப்படையில் தன்னால் ஆரம்பிக்கப்பட்ட பணிகளைத் தொடரவேண்டும்.

ராஜபக்‌சவின் அனுமதியைப் பெற்று தேசிய அரசு நிறுவப்படவில்லை. கணிசமான அளவு தூரம் பயணம் செய்து விட்டு அது முடிவடைய முதல் அதில் எந்தவிதமான மாற்றமும் இருக்கமுடியாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.