ஹக்கீமை கட்சித் தலைமைப் பதவியிலிருந்து நீக்குமாறு வலியுறுத்தல்!

Report Print Samy in அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீம் கட்சித் தலைமைப்பதவியிலிருந்து நீக்கினால் அட்டாளைச்சேனை பிரதேச சபையில் ஆட்சியமைக்க நான்உடன்படுவேன், இல்லேயேல் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்க்கட்சிஆசனத்தில் அமர வேண்டி வரும் என அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள்தவிசாளரும், வெற்றி வேட்பாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.அன்சில் தெரிவித்தார்.

அவர் ஊடகங்களுக்கு வழங்கிய பிரத்தியோக செவ்வியின்போது அவர் இவ்வாறுதெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

எனது போராட்டம் முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரானது அல்ல, அது ஹக்கீமின்தலைமைத்துவத்திற்கு எதிரானது. அதற்காக வேண்டி எடுக்கப்பட்ட போராட்டத்தில்ஒருபோதும் நான் சறுகிவிடப் போவதில்லை என்றார்.

எனது உள்ளம் சுத்தமானது அந்த சுத்தத்திற்கு தகுந்த தீர்ப்பை அல்லாஹ் வழங்கியுள்ளான்.

ஹக்கிம் என்ற தனிநபரின் அடாவடித்தனங்களை நான் ஏற்றுக்கொண்டுசென்றிருந்தால் மிக இலகுவாக அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குரிய தவிசாளர் பதவிஎனக்கு கிடைத்திருக்கும்.

ஆனால் அவருக்கெதிராகவும், கட்சியை நம்பிவாக்களிக்கும் எமது மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே நாங்கள் வெளியேறிபல போராட்டங்களை நடாத்தி வருகின்றோம். அதில் பாரிய வெற்றியையும் இறைவனின்உதவியால் வெற்றி கண்டுள்ளோம்.

தலைமைப் பதவியிலிருந்து ஹக்கீமை விலக்குங்கள், இந்த கணமே நான் வருகிறேன்,எனது போராட்டம் கட்சிக்குரியது அல்ல, தலைமைப் பதவியில் இருந்து கொண்டு தனிநபரின் ஆதிக்கத்தை அள்ளி வீசுகின்ற போராட்டமே ஆகும்.

நாங்கள் முஸ்லிம்காங்கிரஸ் என்ற அந்த கட்சிக்காகவே பாடுபடுவேன். அதனை துாய பாதைக்குஇட்டுச்செல்லும் வரை எங்கள் போராட்டம் தொடரும் அதுவரை பேராடுவேன்.

எனது போராட்டத்துக்கு சகல வழிகளிலும் உதவி ஒத்தாசைகளை வழங்கிய எனதுஉள்ளங்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் நன்றி கூறியவனாகவும், அவர்களுக்காக நான்என்றும் கடமைப்பட்டிருப்பேன் என்றார்


You may like this video