வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 407 ஆசனங்கள் வெற்றி!

Report Print Samaran Samaran in அரசியல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்காலத்தில் பலமடைய வேண்டும்! ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து செயற்பாடுகளும் மறு சீரமைக்கப்பட வேண்டும்.

இளைஞர்களை அதிகமாக உள்வாங்கி, மக்களின் விருப்புக்கமைய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றிணைந்து பலமான அரசியல் ஸ்திரத்தன்மையை உருவாக்க முன்வரவேண்டும்.

மாற்றம் வேண்டும் மாற்றம் வேண்டும் என்று வாக்களித்த யாழ்ப்பாண மக்கள் இன்று பல பிரதேச சபைகளிலும் ஆட்சி அமைக்க முடியாது எல்லோரிடமும் ஆதரவு வேண்டி நிற்கும் நிலை ஏற்பட்டது. மாற்றம் வேண்டும் ஆனால் ஆரோக்கியமான மாற்றம் தேவை!

மாற்றம் அனைவருக்கும் தான் வந்தது.

இப்பொழுது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் EPDP என்பன கிட்டத்தட்ட சமனான அளவுக்கு வாக்குகளைப் பகிர்ந்துள்ளன.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 80 ஆசனங்களையும்

EPDP 77 ஆசனங்களையும் எடுத்திருக்கின்றன என்றால்

சுதந்திரக்கட்சி 31 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 25 ஆசனங்களையும் வென்றுள்ளன.

உதயசூரியன் மற்றும் சுயேட்சை குழுவினர் தலா 21 ஆசனங்களையும் பெற்றுள்ளனர்.

இதுதான் ஏற்பட்ட மாற்றம். ஆக மொத்தத்தில் நாம் பலமாக இருக்கின்றோமா என்றால் இல்லை என்பதே பதில்.

நாங்கள் பிளவடைந்து இருக்கின்றோம். இதை தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் மக்கள் உணர்ந்து எதிர்காலத்தில் பலமான அமைப்பாக உருவாக வேண்டுமானால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிலரை புறமொதுக்கி தமிழ்த் தேசியத்தில் பலமடைய வேண்டும் வடக்கு கிழக்கு மக்கள் தேர்தல் மூலம் தெளிவாக கூறி விட்டதாக அரசியல் அவதானிகள் கூறுகின்றார்கள்...