மக்கள் எம்மை தொடர்பு கொள்ளலாம்: ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர்

Report Print Sinan in அரசியல்

நாட்டை முன்னெடுத்து செல்வது தொடர்பில் மக்களிடமும் அபிப்பிராயங்கள் கேட்கப்படவுள்ளதாக ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் சட்டத்தரணி ரஜிக்க கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

தேர்தல் காலங்களில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

அந்த வகையில் ஊழல் மோசடிகள் இல்லாத நாட்டை கட்டியெழுப்ப மக்களும் அரசாங்கத்திற்கு உதவ வேண்டும்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை தெரிந்துகொள்ள 2 தொலைபேசி இலக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

1. சட்டத்தரணி ரஜிக்க கொடிதுவக்கு 076 - 4654600

2. சட்டத்தரணி ரணில அமரதுங்க 077 - 5770862