காதலர் தினத்தன்று மஹிந்தவுடன் சங்கமமாகும் உறுப்பினர்கள்

Report Print Rakesh in அரசியல்

குட்டித் தேர்தலில் மஹிந்த வெற்றி பெற்றுள்ளதால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அரசியல் ரீதியாக பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

அவருக்கு ஆதரவு வழங்கியிருந்த தொகுதி அமைப்பாளர்களுள் முக்கிய உறுப்பினர்கள் சிலர் மஹிந்தவுடன் சங்கமிக்கவுள்ளனர் என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில்,

“அரசியல் ஸ்திரமற்ற தன்மை, மாகாண சபைத் தேர்தல் உட்பட மேலும் சில காரணங்களைக் கருத்தில் கொண்டே அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர் என்றும், எதிர்வரும் 14ஆம் திகதி பஸில் ராஜபக்ஸவுடன் அவர்கள் முக்கியத்துவமிக்க பேச்சை நடத்தவுள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.

அத்துடன், சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் சிலரும் மஹிந்தவுடன் பேச்சு நடத்தி வருகின்றனர். தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினரானவர்களே மைத்திரிக்கு தற்போது ஆறுதலாக இருந்து வருகின்றனர்.

பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படும் பட்சத்தில் தேசிய அரசை 2020ஆம் ஆண்டுவரை தொடரலாம் என்ற நிலைப்பாட்டிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் சிலர் இருக்கின்றனர்.

எனினும், சில அமைச்சர்கள் இந்த விடயத்தில் மதில்மேல் பூனை நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர்.

நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டத்திலும் இது பற்றி விரிவாக ஆராயப்பட்டுள்ளது” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.