துறைநீலாவணை மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை மறக்கமாட்டர்கள்

Report Print Nesan Nesan in அரசியல்

துறைநீலாவணை மக்கள் ஒருபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை மறக்கமாட்டர்கள் என்பதனை நடைபெற்று முடிந்த தேர்தலில் பறைசாற்றியுள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சரவணமுத்து தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து தமது ஆரவாளர்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கூறுகையில்,

தமிழ்த் தேசியத்திற்கும் போராட்டத்திற்கும் உரமூட்டிய துறைநீலாவணை மக்கள் ஒருபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை மறக்கமாட்டர்கள் என்பதனை நடைபெற்று முடிந்த தேர்தலில் பறைசாற்றியுள்ளனர்.

துறைநீலாவணை மண்ணையும் மக்களையும் மறந்துவிட முடியாது.

இங்கு வாழும் எமது மக்கள் தமிழ்த் தேசியத்தில் மிகவும் பற்றுறுதி கொண்டவர்கள் என்பது இன்று நேற்றல்ல தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இன்று வரைக்கும் தமிழ் மக்களின் உரிமைக்காக சோரம் போகாது வாக்களித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெல்லவைத்த வரலாறே இருக்கின்றது.

இந்த தேர்தலில் துறைநீலாவணை வட்டாரத்தில் பல கட்சிகள் போட்டியிட்ட போதும் அந்த கட்சிகள் அனைத்தையும் நிராகரித்து என்னையும் நான் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் வெற்றியடைச் செய்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலத்தை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.