உண்ணாவிரதத்தை கைவிட்ட பிரதியமைச்சர்: காரணம் என்ன?

Report Print Steephen Steephen in அரசியல்

பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும தான் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதத்தை தனது மகனின் சுகவீனம் காரணமாக நிறுத்த தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தனது ஆதரவாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து பிரதியமைச்சர் இந்த உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.

புளத்சிங்கள நகரில் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் பாலித தெவரப்பெரும இந்த உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.

எவ்வாறாயினும் தனது மகனுக்கு இன்று ஏற்பட்ட சுகவீனம் காரணமாக பிரதியமைச்சர் தனது உண்ணாவிரதத்தை கைவிட தீர்மானித்துள்ளார்.

இதனையடுத்து அவரும் சிகிச்சைக்காக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பாலித தெவரப்பெருமவின் மகனொருவர் இதற்கு முன்னர் சுகவீனம் காரணமாக உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.