இறந்து விடுவேன் என்ற கவலையில் இருந்தேன்: குணதாச அமரசேகர

Report Print Steephen Steephen in அரசியல்

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கிடைத்த வெற்றி பெரும்பாலும் அரசியல் ரீதியாக கிடைத்த வெற்றியை விட மக்களின் அமைதியான புரட்சியாக கருத முடியும் என சிங்கள தேசியவாதியான கலாநிதி. குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற சிங்கள தேசிய அமைப்புகளின் ஒன்றியத்தின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டின் தற்போதைய அரசாங்கத்தின் முடிவை காணாமல் இறந்து போவேனோ என்ற கவலை இருந்தது. உள்ளூராட்சி சபைத் தேர்தல் வெற்றி காரணமாக அந்த கவலை இல்லாமல் போயுள்ளது.

கிடைத்துள்ள இந்த வெற்றியால், பெரும்பான்மையான சிங்கள மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த 1956 ஆம் ஆண்டு நடந்த புரட்சியை விட இம்முறை மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது.

நாட்டின் தற்போதைய அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்தே அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக செயற்பட்டது. மக்கள் வழங்கிய தீர்ப்புடன் அதிகாரத்தில் இருக்க அரசாங்கத்திற்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை எனவும் குணதாச அமரசேகர குறிப்பிட்டுள்ளார்.