இதற்கு ரணில் காரணமில்லை! அமைச்சர் பதில்

Report Print Steephen Steephen in அரசியல்

அரசாங்கம் எதிர்நோக்கியுள்ள அரசியல் பிரச்சினைக்கு காரணம் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையோ அல்லது பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்க வகிப்பதோ இல்லை என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹசீமுடன் தொலைபேசியில் தொடர்புக்கொண்டு அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் அரசாங்கத்திற்கு பாரதூரமான செய்திகளை வழங்கியுள்ளனர் எனவும் இதனை சரியாக புரிந்துக்கொண்டு வேலை செய்யவில்லை என்றால், மிகவும் நெருக்கடியான அரசியல் சூழ்நிலையை எதிர்நோக்க நேரிடும் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கு நெருக்கமான அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை மிகவும் சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் பொது இணக்கத்துடன் கூடிய மாற்று வேலைத்திட்டத்தை முன்னெடுத்து ஜனவரி 8 சக்திகள் மட்டுமல்ல, அரசாங்கத்தில் இருந்து விலகி வரும் சக்திகளை மீள வென்றெடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

ஊழல்வாதிகளை தண்டிக்க விசேட நீதிமன்றத்தை ஏற்படுத்த வேண்டும் என தொடர்ந்தும் அரசாங்கத்திற்குள் குரல் கொடுத்து வந்ததாகவும் இதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்காத காரணத்தினால், திருடர்கள் மக்கள் ஆணையை கொள்ளையிடும் நிலைமை உருவாகியது எனவும் சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.