புகலிடம் கோரிய புலிகளின் உறுப்பினரை நாடு கடத்தும் அவுஸ்திரேலியா

Report Print Steephen Steephen in அரசியல்

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி, அங்கு புலம்பெயர்ந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினரை இலங்கைக்கு நாடு கடந்த அந்நாட்டு அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக கார்டியன் பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு இலங்கையில் இருந்து அகதியாக சென்ற, இந்த நபர், அங்கு தங்கியிருக்க அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிராலயம் வழங்கிய அனுமதியை நிராகரித்து, அவரை நாடு கடத்த அவுஸ்திரேலிய அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

புலிகளின் இந்த உறுப்பினர் புகலிடம் கோரி செய்திருந்த விண்ணப்பத்தை அவுஸ்திரேலிய எல்லை மற்றும் குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் ஆராய்ந்து வந்ததுடன் அதில் தான் விடுதலைப் புலிகளின் உறுப்பினராக அங்கம் வகித்தமை சந்தேக நபர் மறைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் புகலிடம் பெற, இலங்கையில் தான் சித்திரவதைகளுக்கு உள்ளானதாக கூறி, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரது கடிதத்தையும் சந்தேக நபர், அதிகாரிகளிடம் முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.