அனைத்து சபைகளிலும் ஆட்சி அமைப்பதற்கு ஈ.பி.டி.பி ஆதரவு

Report Print Suthanthiran Suthanthiran in அரசியல்

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிட்ட ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினுடைய பெறுபேறுகளில் தனக்கு திருப்தி இல்லா விட்டாலும் வாக்களித்த மக்களுக்கு எனது நன்றிகள் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபை தேர்தலில் தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

இந்த நிலையில் சில சபைகைளை தவிர்ந்து ஏனைய சபைகளில் தொங்கு நிலைமை காணப்படுவதால் எந்த கட்சி மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை முன்னெடுக்கப்படுகின்றதோ அந்த கட்சிக்கு நாங்கள் வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதற்கு தயாராக உள்ளோம்.

இதேவேளை இந்த கட்சிகளுக்கு இடையில் வெளி பிரமுகர்கள் அல்லது சம்மந்தப்பட்ட கட்சியை சார்ந்தவர்களுக்கு இடையில் பேச்சுவார்ததையும் நடைபெற்று வருகின்றதாக குறிப்பிட்டுள்ளார்.