அடுத்தக்கட்டம் என்ன? மஹிந்த தலைமையில் களமிறங்கும் விசேட குழு

Report Print Ajith Ajith in அரசியல்

தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து ஆராயந்து தீர்மானம் மேற்கொள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில், ஒன்றிணைந்த எதிரணி குழுவொன்றை அமைத்துள்ளது.

மஹிந்த ராஜபக்ச தலைமையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஒன்றிணைந்த எதிரணியின் கட்சித் தலைவர்கள் நடத்திய சந்திப்பில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஒன்றிணைந்த எதிரணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் இந்தக் குழுவில் உள்ளதாக அறியமுடிகின்றது.

கொழும்பின் தற்போதைய அரசியல் நிலைமைகள் பெரும் பரபரப்பை எட்டியுள்ளன.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் நேற்றிரவு சந்திப்பொன்று இடம்பெற்ற நிலையில், இன்றிரவு சந்திப்பொன்று ஆரம்பமானது.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று தனித்தனியாக சந்திப்புக்களை நடத்தியிருந்தார்.

இந்த நிலையில், மஹிந்த தரப்பும் இன்று மாலை சந்திப்பொன்றை நடத்தியிருந்ததுடன், குழுவொன்றை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.