பரபரப்படையும் கொழும்பு அரசியல்! பிரதமர் குறித்து தீர்மானிக்க சிறப்பு குழு நியமனம்

Report Print Murali Murali in அரசியல்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைதொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழு ஒன்று நாளைய தினம் ஏற்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் அவசர சந்திப்பு ஒன்று இன்று இரவு இடம்பெற்றிருந்தது.

இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். இதன் போது பல அமைச்சரவை பிரதானிகள் ஊடகவியலாளர்களைச் சந்திக்காமலேயே வெளியேறியிருந்தனர்.

இந்நிலையில், இன்றைய சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் சஜித் பிரேமதாச இவ்வாறு கூறியுள்ளார்.

“நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைதொடர்பில் ஆராய்வதற்கு 10 பேர் அடங்கிய விசேட குழு ஒன்று நாளைய தினம் ஏற்படுத்தப்படவுள்ளது.

இந்த குழுவின் ஊடாக நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகள் தொடர்பில் உடனடியான தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன.

நாளை இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர், இக்குழு அறிவிக்கப்படும் எனவும், நாளைய தினமே இக்குழு கூடி உரிய தீர்மானங்களை அறிவிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதமராக ரணில் விக்ரமசிங்க தொடர்வதா, இல்லையா என்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்த குழு ஆராயவுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.