அரசாங்கத்துக்கு பதவியில் நீடிக்க தார்மீக உரிமையில்லை! தேசிய சுதந்திர முன்னணி

Report Print Aasim in அரசியல்

தற்போதைய அரசாங்கம் பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டதாக தேசிய சுதந்திர முன்னணி கட்சி தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பில் நடைபெற்ற தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக சந்திப்பில் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் முஹம்மத் முசம்மில் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர், உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது பொதுமக்கள் ஜனாதிபதி, பிரதமர் இருவரையும் ஒருசேர நிராகரித்துள்ளனர்.

அவ்வாறான நிலையில் இந்த அரசாங்கம் தொடர்ந்தும் பதவியில் இருக்கும் தார்மீக உரிமையை இழந்துள்ளது.

அவ்வாறான நிலையில் பிரதமர் பதவியில் மட்டும் மாற்றத்தைக் கொண்டுவந்து அரசாங்கத்தை நீடிக்கும் முயற்சி பொதுமக்களின் எதிர்பார்ப்பை கேலிக்குள்ளாகுக்கும் செயலாகும் என்றும் முஸம்மில் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.