ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை! அமைச்சர் ஹக்கீம்

Report Print Murali Murali in அரசியல்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக உள்ளாட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கான ஒன்றுகூடல் கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இன்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நாடளாவிய ரீதியில் 19 மாவட்டங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 185 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. 13 சபைகளில் ஆட்சியமைக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளது.

இதற்கான பேச்சுவார்த்தைகள் தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனும் இடம்பெற்று வருகின்றது. இது தொடர்பில் கொள்கை அளவில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

அத்துடன், அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறுவதுடன், சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் ஜனாதிபதியுடன் இன்று காலை விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்ததாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.