ஐ.தே.கவின் தனி அரசாங்கத்தில் சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட அமைச்சர்கள் சிலர் இணைவு?

Report Print Kamel Kamel in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியினால் அமைக்கப்பட உள்ள தனியான அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட அமைச்சர்கள் இணைந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி விரைவில் தனித்து ஆட்சி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அரசாங்கத்துடன் சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட அமைச்சர்கள் சிலர் இணைந்து கொள்ள உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிதாக உருவாக்கப்படும் அரசாங்கத்தில் இந்த சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை இணைத்துக் கொள்வதற்கு ஏற்கனவே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கக்கூடிய சாத்தியம் உண்டு என தெரிவிக்கப்படுகிறது.