நாட்டின் அடுத்த கட்ட நகர்வு: மைத்திரி எடுத்துள்ள முடிவு

Report Print Steephen Steephen in அரசியல்

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் நாட்டை அரசியல் ஸ்திரத்தன்மையுடன் முன்னெடுத்துச் செல்வது எப்படி என்பதை தீர்மானிக்க, குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நேற்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போதே ஜனாதிபதி இந்த யோசனையை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஜனாதிபதியின் இந்த யோசனைக்கு பிரதமரும் இணங்கியுள்ளார்.

இதனடிப்படையில், உத்தேச குழு நாளைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது நியமிக்கப்பட உள்ளது.