இலங்கை அரசியலில் குழப்ப நிலை! அமெரிக்கா, இந்தியா தீவிர கவனம்

Report Print Vethu Vethu in அரசியல்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலை தொடர்பில் சர்வதேச நாடுகள் அதிக கவனம் செலுத்தியுள்ளன.

இலங்கையின் சமகால அரசாங்கம் நிச்சயமற்ற நிலையில் காணப்படுகிறது. எந்த நேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கொழும்பு அரசியல் ஏற்படவுள்ள மாற்றும் குறித்து அறிந்து கொள்வதில் வெளிநாட்டு தூதுவர்கள் தீவிர ஆர்வம் செலுத்து வருகின்றனர்.

இலங்கையின் அமெரிக்க தூதுவர் மற்றும் இந்திய தூதுவர் நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதி மற்றும் பிரதமரை தனித்தனியாக சந்தித்துள்ளார்.

இந்தியாவின் புதிய வெளிவிவகார செயலாளரை சந்திப்பதற்கு புதுடெல்லி செல்வதற்கு முன்னர் உயர்ஸ்தானிகர் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்த உயர்ஸ்தானிகர் அவர்களின் நிலைப்பாடு மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடியதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.