அடுத்த 24 மணி நேரத்திற்குள் அரசியலில் திடீர் திருப்பம்!

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கை அரசியலில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் பாரிய மாற்றம் ஏற்பட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சர்கள் துமிந்த திஸாநாயக்க, மகிந்த சமரசிங்க உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 10 முதல் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்து, அந்த கட்சியின் அங்கத்துவத்தை பெற்றுக்கொள்ள உள்ளதாக நம்பிக்கையான அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தனி அரசாங்கத்தை அமைப்பது குறித்து தற்போது பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைவதன் மூலம் அந்த கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் கிடைக்கும்.

இதனையடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும், ஐக்கிய தேசியக்கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை முடிவுக்கு வரும் எனவும் தெரியவருகிறது.

இதேவேளை, புதிய அரசாங்கத்தை அமைக்க துமிந்த திஸாநாயக்க, மகிந்த சமரசிங்க உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 10 முதல் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக்கட்சியின் ஆசனங்களில் அமரவுள்ளனர்.