தேர்தல் வரலாற்றிலேயே மூன்றாவது சக்தி வெற்றி பெற்றமை இதுவே முதல் முறை

Report Print Steephen Steephen in அரசியல்

“அரசாங்கத்தில் மாற்றம்” என்ற செய்தியை உருவாக்கி, தற்போது ஏற்பட்டுள்ள மாற்றத்தை கீழடிப்பு செய்ய அரசாங்கம் முயற்சித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே ஊடகங்களில் பிரதான செய்தியாக “அரசாங்க மாற்றம்” பற்றிய செய்திகள் வெளியிட்டு வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தேர்தலில் ஏற்பட்டுள்ள தோல்வியில் ஜனவரி 8 உடன் சம்பந்தப்பட்ட சிவில் அமைப்புகள் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையை மழுங்கடிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் காரணமாக ஊடகங்கள் பொறுப்புடன் செய்றபட வேண்டும். அத்துடன் நாட்டின் தேர்தல் வரலாற்றில் இரண்டு பிரதான கட்சியை வீழ்த்தி விட்டு மூன்றாவது சக்தி தேர்தலில் வெற்றி பெற்றமை இதுவே முதல் முறையாகும்.

நாட்டு மக்களின் நிலைப்பாட்டில் தெளிவான மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.