கூட்டமைப்பில் தவிசாளர் போட்டி ஆரம்பம்! செய்வதறியாது திகைக்கும் கட்சித்தலமைகள்

Report Print Samaran Samaran in அரசியல்

வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் சிலர் சபைகளில் தவிசாளர் பதவியை குறிவைத்துள்ளனர்.

சபைக்குட்பட்ட பிரதேசத்தில் வட்டார ரீதியில் அதிகப்படியான வாக்குகள் பெற்றவர்கள் தமக்கு தவிசாளர் பதவி வேண்டும் என்ற ரீதியில் கட்சியின் உயர்மட்டங்களை சந்தித்து பேசிவருகின்றனர் இதேவேளை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சபைகளை கைப்பற்றி இருந்தாலும் சபையின் ஆட்சியை நடாத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் சிலர் தவிசாளர் பதவியை குறிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.