கோத்தபாயவை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையுத்தரவு நீடிப்பு

Report Print Steephen Steephen in அரசியல்
கோத்தபாயவை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையுத்தரவு நீடிப்பு

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் கைது செய்வதை தடுத்து நிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்துள்ள தடையுத்தவு எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன் போது கோத்தபாய ராஜபக்ச சார்பில் ஆஜரான சட்டத்தரணி தனது தரப்பு வாதி கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையிலான தடையுத்தரவை நீடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனை கவனத்தில் எடுத்துக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் தடையுத்தரவை நீடித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆட்சிக்காலத்தில் தமது பெற்றோரான டி.ஏ. ராஜபக்ச மற்றும் அவரது பாரியாருக்கு அருங்காட்சியகத்தை நிர்மாணித்தில் அரச பணத்தை தவறாக பயன்படுத்தியதாக கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் கோத்தபாய ராஜபக்சவை கைதுசெய்ய முயற்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிட்டத்தக்கது.