நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வெளிநாட்டுத் தூதுவர்கள்

Report Print Steephen Steephen in அரசியல்

பிரபல நாடுகள் சிலவற்றின் தூதுவர்கள் தலையிட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையிலான நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆசியாவில் ஜனநாயக ரீதியாக மிகவும் உயர்ந்த நிலையை அடைந்து வரும் நாடு இலங்கை எனவும் அரசியல் தொடர்பில் குறைந்த அனுமானத்தில் உள்ள இலங்கை மக்கள் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வழங்கிய வாக்குகளை அடிப்படையாக கொண்டு இரண்டு தரப்பினரும் கூட்டணியை முறித்துக்கொள்வது ஞானமற்ற செயல் என தூதுவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எவ்வாறாயினும் மக்களின் நிலைப்பாட்டை முற்றாக புறந்தள்ள முடியாது எனவும் மக்கள் நாட்டின் அபிவிருத்திக்கு தடையாக இருக்கும் வீண்விரயம் மற்றும் ஊழலை எதிர்க்க வேண்டும் எனவும் தூதுவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நல்லாட்சி அரசாங்கம் வீழ்ச்சியடைவது, பிராந்திய பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

மக்களை தூண்டி விடுவதற்காக ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் நாட்டை கடன் சிக்கலில் சிக்கவைத்த முக்கிய நாடு சூழ்ச்சிகளை முன்னெடுத்து வருவதாகவும் அதில் சிக்கிக்கொள்ளாது புத்திசாலித்தனமாக இருக்குமாறும் வெளிநாட்டு தூதுவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதற்கு அமைய அமைச்சரவையில் பாரிய மாற்றங்களை செய்து, நல்லாட்சி அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல ஜனாதிபதியும் பிரதமரும் இணங்கியதாக கூறப்படுகிறது.

அரசாங்கத்தில் இருந்து கொண்டு அரசாங்கத்தை விமர்சிக்கும் அமைச்சர்கள், தேசிய பட்டியல் அமைச்சர்கள் மற்றும் திறம்பட பணியாற்றாத அமைச்சர்களை பதவிகளில் இருந்து நீக்கவும் திட்டமிட்டுள்ளதாக பேசப்படுகிறது.