கௌரவ சபாநாயகர் அவர்களே! உங்களை சந்திக்க நாங்கள் வருகின்றோம்

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்க்கட்சி என்ற உத்தியோகபூர்வ உரிமையை கூட்டு எதிர்க்கட்சியினருக்கு வழங்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுப்பதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

நாங்கள் தேர்தலை எதிர்கொண்டு, நாம் எமது வாக்கு வங்கியை ஒப்புவித்து காட்டியிருக்கின்றோம். எவரும் சவால் விடுக்க முடியாத வாக்கு வங்கியை உறுதிப்படுத்தியிருக்கின்றோம். அரசாங்கத்திற்கு எதிராக வாக்குகளை சேகரித்துள்ளோம்.

இதனால், கௌரவ சபாநாயகர் அவர்களே அடுத்த வாரம் நாங்கள் உங்களை சந்திக்க வருகிறோம். எதிர்க்கட்சியின் அதிகாரபூர்வ உரிமையை எமக்கு பெற்றுக்கொடுங்கள். ஜனநாயகத்திற்கு தலைவணங்குங்கள்.

இந்த அரசாங்கம் மூன்று பாரதூரமான ஜனநாயக மீறல்களை மேற்கொண்டது. ஜனவரி 9ஆம் திகதி சட்டரீதியான அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பியது.

இதேவேளை, உலக வரலாற்றில் தேர்தலில் தோல்வியடைந்த 12 பேரை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து அமர வைத்தனர். நாடாளுமன்றத்தில் இருப்பவர்களில் 20 வீதமானவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்.

மேலும், அமைச்சரவையிலும் மக்களால் நிராகரிக்கப்பட்ட 10 வீதமானவர்கள் அங்கம் வகிக்கின்றனர். புண்ணியத்தில் அமைச்சர்களானவர்கள்.

நாடாளுமன்றத்தில் 20 வீதம், அமைச்சரவையில் 10 வீதம் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் இருக்கின்றனர். உலகில் எங்கு இப்படி இருக்கின்றது என டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.