வடமாகாண முதலமைச்சருக்கும் கஜேந்திரகுமாருக்கும் இடையில் விசேட சந்திப்பு

Report Print Suthanthiran Suthanthiran in அரசியல்

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனுக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று நடை பெற்றிருக்கின்றது.

முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் இன்று சுமார் 20 நிமிடங்கள் வரை இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பு தொடர்பாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது,

கடந்த சில மாதங்களாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்திக்க இயலாமல் இருந்தது. இந்நிலையில் நல்லெண்ண சந்திப்பாக இந்த சந்திப்பு நடைபெற்றிருந்தது.

மேலும் முதலமைச்சர் தேர்தல் காலங்களில் நல்ல அறிக்கைகளை வெளியிட்டிருந்தார். அதற்காகவும் இன்றைய சந்திப்பு விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்டது.

இந்த சந்திப்பின்போது சமகால அரசியல் நிலைமைகள் குறிப்பாக பேசினோம். விசேடமாக உள்ளூராட்சி சபை தேர்தலின் பின்னர் தென்னிலங்கையில் உண்டான மாற்றங்கள் தொடர்பாக பேசினோம்.

மேலும் மாகாணசபை தேர்தல் தொடர்பாகவும் பேசினோம். தொடர்ந்து தமிழ்தேசிய அரசியலை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்துவது தொடர்பாகவும் பேசியிருக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.