நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிப்பவரை பிரதமராக்குங்கள்: ஜனாதிபதிக்கு யோசனை

Report Print Ajith Ajith in அரசியல்

பிரதமர் பதவி தொடர்பில் தேசிய அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை நீடித்தவண்ணம் உள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பவரை பிரதமராக நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஜனாதிபதியிடம் யோசனை முன்வைத்துள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர், எழுத்துமூலம் இந்த யோசனையை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளதாக அறியமுடிகின்றது.