தெரிவான பிரதிகளுக்கான அமர்வு தொடர்பில் வர்த்தமானி!

Report Print V.T.Sahadevarajah in அரசியல்

புதிதாக தெரிவுசெய்யப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களை அமைப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பு மகாணசபை உள்ளுராட்சி அமைச்சினால் இன்று வெளியிடப்படவுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவிப்பிற்கு அமைவாக புதிதாக தெரிவுசெய்யப்பட்ட உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களுக்கான அமர்வு அடுத்த மாதம் 15 ஆம் திகதி இடம்பெறும் என்று மாகாணசபைகள் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் கமல் பத்மஸ்ரீ தெரிவித்துள்ளார்.

இம்முறை நாட்டிலுள்ள 341 மன்றங்களில் 340 மன்றங்களுக்கு ஒரே நாளில் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகளும் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் தெரிவான பிரதிநிதிகளுக்கான அமர்வு இடம்பெறுவது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.