மைத்திரியின் முடிவுகளுக்கு கட்டுப்படத் தயார்!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளத் தயார் என அறிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் இன்று சந்தித்துப் பேசியிருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், .

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டு, தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் போது மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொண்டதாக பகிரங்க அறிவிப்புச் செய்திருந்தது.

இந்த நிலையில் மீண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடிய பின்னர், தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளத் தயார் என்ற உறுதி மொழியை ஆறுமுகம் தொண்டமான் வழங்கியுள்ளார் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.