இலங்கை அரசியல் வரலாற்றில் இதுவே முதல் சந்தர்ப்பம்!

Report Print Murali Murali in அரசியல்

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் கொழும்பு அரசியலை ஆட்டம் காணவைத்துள்ளது.

முன்னெப்போதும் இல்லாத வகையில், தேர்தல் ஒன்றில் ஆளும் கட்சியை பார்க்கிலும் மூன்றாவது கட்சியொன்று அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது.

கடந்த 10ம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பிரதான அரசியல் கட்சிகள் பாரிய பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், கன்னி போட்டியில் களமிறங்கிய மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கட்சி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்கிவிட்டு அந்த பதவிக்கு வேறு ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுபெற்றுள்ளது. இதனால் கொழும்பு அரசியல் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது.

தேர்தல் முடிவுகள் வெளியானதன் பின்னர் ஜனாதிபதியும், பிரதமரும் மூன்று முறை அவசரமாக சந்தித்து பேசியிருந்தனர். எனினும், ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலைக்கு தீர்வு காணவில்லை.

இவ்வாறான நிலையில், பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுவடைய தொடங்கியிருக்கின்றது.

அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுமாக இருந்தால், இலங்கை வரலாற்றில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெற்றதன் பின்னர், பிரதமரும் அரசாங்கமும் மாற்றப்பட்ட முதல் சந்தர்ப்பமாக வரலாற்றில் பதிவாகும் என தெரிவிக்கப்படுகின்றது.