உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் உயர்வு

Report Print Kamel Kamel in அரசியல்
158Shares

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் வாக்குகளின் அடிப்படையில் கட்சிகளுக்கு கிடைத்த ஆசனங்களை விடவும், தொகுதிகளில் வெற்றியீட்டிய காரணத்தினால் ஆசனங்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.

சுமார் 364 உறுப்பினர்கள் மேலதிகமாக தெரிவாகியுள்ளனர். இதன்படி, 340 உள்ளூராட்சி மன்றங்களுக்காக தெரிவாகியுள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 8689 ஆகும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

340 உள்ளூராட்சி மன்றங்களில் 8325 உறுப்பினர்கள் தெரிவாக வேண்டியிருந்த போதிலும், அந்த எண்ணிக்கை 364இனால் உயர்வடைந்துள்ளது.

மேலதிகமாக தெரிவாகிய உறுப்பினர்களுக்கான செலவுகளையும் மக்களே ஏற்றுக்கொள்ள நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.