வேலணை சபையின் தவிசாளராக நாவலன்!

Report Print Rakesh in அரசியல்
84Shares

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்கவுள்ள வேலணைப் பிரதேச சபையின் தவிசாளராக கருணாகரன் நாவலன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

உப தவிசாளராக முதலாவது ஆண்டுக்கு, அன்ரனி அமிர்தநாதர் மேரிமச்ரில்டா (தங்கராணி) தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கும் உப தவிசாளராக செல்லப்பா பார்த்தீபன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வேலணைப் பிரதேச சபையின் 20 ஆசனங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 8 ஆசனங்களைக் கைப்பற்றி, அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற தனிக் கட்சியாக உள்ளது.