கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேசசபையின் தவிசாளர் மற்றும் உபதவிசாளர் பதவிகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இளைஞர்களுக்கு கொடுத்துள்ளார்.
அந்த வகையில் தவிசாளராக கிளிநொச்சி மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞரணித் தலைவர் சு.சுரேனும், உப தவிசாளராக பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞரணித் தலைவர் மு.கயனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இளைஞர்கள் பச்சிலைப்பள்ளி பிரதேசசபையின் நேரடி வேட்பாளர்களாகவும் போட்டியிட்டு, வெற்றி பெற்று உறுப்பினரகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஆதலால் இலங்கையில் உள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் அதிகளவான இளைஞர்களைக் கொண்டு இயங்கவுள்ள பிரதேசசபையாக பச்சிசைப்பள்ளி பிரதேசசபை இயங்கவுள்ளமை சிறப்பம்சமாகும்.