தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்கவுள்ள வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளராக சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
உப தவிசாளராக பொன்னம்பலம் இராசேந்திரம் தெரிவு செய்யப்பட்டார்.
சபையின் 4 ஆண்டுகால ஆட்சிக் காலத்துக்கும் இருவருமே தவிசாளராகவும், உப தவிசாளராகவும் தொடரவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ள சோமசுந்தரம் சுகிர்தனே, வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் முன்னைய ஆட்சிக் காலத்திலும் தவிசாளராகச் செயற்பட்டுள்ளார்.