தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணையுங்கள்! யாழில் பகிரங்க அழைப்பு

Report Print Sumi in அரசியல்
659Shares

தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் இதற்கு தமிழ் கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணையுமாறும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் என். ஸ்ரீகாந்தா பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

யாழில் இன்றைய தினம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

ஒரு பொது கொள்கையின் அடிப்படையில் இயங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ் நிலையில், புதிய தேர்தல் முறைமையின் கீழ் விஸ்திரமான நிர்வாகத்தினை எவ்வாறு ஏற்படுத்தப் போகின்றோம் என்பது தான் தற்போதைய கேள்வியாக இருப்பதாகவும் கூறியுள்ளளார்.

சகல உள்ளூராட்சி சபைகளின் ஸ்திர தன்மையினை அறிந்து சகல தமிழ் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தென்னிலங்கையில் ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலை நிலவுகின்றது. என்ன நடக்கும் என்பதை திட்டவட்டமாக ஆருடம் கூற முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எது எப்படி இருந்தாலும், ஏற்கனவே, முன்னெடுக்கப்பட்ட அரசியல் தீர்வு விடயங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, அனைவரும் ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றிணைந்து மக்களுக்காக ஒரே குரல் எழுப்ப வேண்டும் என்றும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் என். ஸ்ரீகாந்தா குறிபப்பிட்டுள்ளார்.