விடுதலைப் புலிகள் இருக்கும் போதே சொன்ன அந்த வேலைத்திட்டம்!

Report Print Nivetha in அரசியல்
279Shares

தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட அனைவரும் ஒரு பொது வேலைத்திட்டத்தில் இணைந்தால் தான் தமிழ் மக்களுக்கு விடுதலை கிட்டும் என்ற கருத்தை அன்று இராணுவத்தினருடன் பிரச்சினைகள் இருந்தபோதே முன்வைத்ததாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

தென்னிலங்கையில் தற்போது எழுந்துள்ள மிகப் பெரிய சவால்களுக்கு முகம் கொடுக்க தமிழர்கள் இணைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, தமிழர்கள் ஒன்றிணைய வேண்டி அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.