சமகால அரசாங்கத்தின் இயலாமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.
உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் வந்து 10 நாட்கள் கடந்துள்ள போதிலும் இதுவரையிலும் அரசாங்கம் ஒன்றை அமைத்து கொள்ள முடியவில்லை. இது குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் வெட்கப்பட வேண்டும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வெளிப்படுத்தாத முறையில் 30 மில்லியன் பணத்தை பெற்றுக்கொண்டமைக்காக, பண தூய்மையாக்கல் குற்றச்சாட்டில் நாமல் ராஜபக்ச உட்பட 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதற்கமைய வழக்கு நிறைவடைந்து நீதிமன்றத்திற்கு வெளியே வந்த நாமல் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்டார்.
கடந்த சில நாட்களாக ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கல் அகழ்வில் ஈடுபட்டுள்ளார்களா என நாமல் கேள்வி எழுப்பியுள்ளார்.
வெளிநாட்டவரான அர்ஜுன் மகேந்திரனை மத்திய வங்கி ஆளுநராக நியமித்தமையினால் பிரதமர் போன்று முறி மோசடிக்கு ஜனாதிபதியும் பொறுப்பு கூற வேண்டும் என நாமல் மேலும் தெரிவித்துள்ளார்.