கூட்டமைப்பு எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு பொருத்தமற்றது?

Report Print Aasim in அரசியல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்குப் பொருத்தமற்றது என்று ஜாதிக ஹெல உறுமயவின் நிஷாந்த ஶ்ரீ வர்ணசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.

மேல்மாகாண சபையின் மாகாண சபை உறுப்பினரும், ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளருமான நிஷாந்த ஶ்ரீ வர்ணசிங்க, மேல் மாகாண சபையின் நேற்றைய அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் விடயங்கள் தொடர்பாகவே நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கின்றது. பொதுவான பிரச்சினைகளில் எந்தவிதமான நாட்டமும் காட்டுவதில்லை.

அதே நேரம் சிற்சில வேளைகளில் அக்கட்சியானது அரசாங்கத்தின் சார்பாகவே செயற்படுகின்றது. எனவே நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு அக்கட்சி பொருத்தமற்றது.

இந்நிலையில் மக்களின் ஆணை பெற்ற மஹிந்த ராஜபக்‌சவுக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்றும் நிஷாந்த ஶ்ரீ வர்ணசிங்க தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.