மோசடியாளர்களுக்கு தலைமைத்துவம் வேண்டாம்! மார்ச் 12 அமைப்பு கோரிக்கை

Report Print Aasim in அரசியல்

ஊழல் மற்றும் மோசடிகளுடன் தொடர்புடையவர்களுக்கு உள்ளூராட்சி மன்றங்களின் தலைமைத்துவத்தை வழங்க வேண்டாம் என்று மார்ச் 12 அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

மார்ச் 12 அமைப்பின் சார்பில் கொழும்பு, மருதானை சமூக மற்றும் சமாதானத்துக்கான மத்திய நிலையத்தின் அரங்கத்தில் நேற்று செய்தியாளர் சந்திப்பொன்று நடைபெற்றது.

நடைபெற்று முடிந்த தேர்தலின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் செயற்பட வேண்டிய விதம் குறித்து சிவில் அமைப்புகளின் எதிர்பார்ப்புகளை தௌிவுபடுத்தும் வகையில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றிருந்தது,

மார்ச் 12 அமைப்பின் குறித்த செய்தியாளர் சந்திப்பில் அதன் இணைத்தலைவர்களில் ஒருவரான ரோஹண ஹெட்டியாரச்சி கலந்து கொண்டு கருத்து வௌியிட்டபோது இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர், உள்ளூராட்சி மன்றங்களை வெளிப்படைத்தன்மையுடனும், திறமையாகவும் வழிநடத்திச் செல்ல ஊழல் மற்றும் மோசடிகளுடன் தொடர்பில்லாதவர்கள் தலைமைத்துவத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும்.

அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி பொருத்தமானவர்களை உள்ளூராட்சி மன்றங்களின் தலைமைத்துவப் பதவிக்கு நியமிக்க வேண்டும் என்றும் ரோஹண ஹெட்டியாரச்சி தொடர்ந்தும் கோரிக்கை விடுத்துள்ளார்.