நல்லாட்சி அரசு தொடர்பில் சபாநாயகரின் விசேட அறிக்கை இன்று

Report Print Jeslin Jeslin in அரசியல்
59Shares

தேசிய அரசாங்கம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஆகியோர் நல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் விடுத்த விசேட கோரிக்கைக்கு அமைவாக குறித்த உரை நிகழ்த்தப்படவுள்ளது.

இது குறித்து நேற்றைய தினம் சபாநாயகர் கரு ஜயசூரிய கருத்து தெரிவிக்கையில்,

தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் இதுவரை தமக்கு எந்த அறிவித்தலும் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், பிரதமருடன் கலந்துரையாடியதன் பின்னர் இன்றைய தினம் அதற்கான பதிலை வழங்குவதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.