உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் இரண்டு வாரங்களில் அறிவிக்கப்படும்

Report Print Kamel Kamel in அரசியல்

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தெரிவான உறுப்பினர்களது பெயர் விபரங்கள் இரண்டு வாரங்களில் வெளியிடப்பட உள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

புதிய உள்ளூராட்சி மன்றங்களை நிறுவுதல் மற்றும் அந்தந்த கட்சிகளின் உறுப்பினர்களை பெயரிடுதல் தொடர்பில் சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற சந்திப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சித் தலைவர்கள், தேர்தல் ஆணைக்குழு மற்றும் எல்லை நிர்ணய குழுவின் தலைவர், துறைசார் அமைச்சர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

மேலும், உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.