ஊழல் குற்றச்சாட்டை எதிர்நோக்கும் அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம்

Report Print Steephen Steephen in அரசியல்
199Shares

நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை மாற்றம் இன்று அல்லது நாளை மேற்கொள்ளப்படும் என தெரியவருகிறது.

இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சுக்களில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டை எதிர்நோக்கும் அமைச்சர்களுக்கு அவர்கள் வகித்து வந்த அமைச்சு பதவிகளை அவர்களுக்கு மீண்டும் வழங்குவதில்லை என்ற கடும் தீர்மானத்தை ஜனாதிபதி எடுத்துள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் தகவல்கள் கூறுகின்றன.

இன்று மேற்கொள்ளப்படவிருந்த அமைச்சரவை மாற்றம் நாளைய தினத்திற்கு ஒத்திவைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

தமது அமைச்சுக்களில் மாற்றங்களை ஏற்படுத்த உள்ளதாக அறிந்துக்கொண்ட அமைச்சர்கள் சிலர் கடும் எதிர்ப்புகளை வெளியிட்டதால், ஐக்கிய தேசியக்கட்சியின் அமைச்சரவை திருத்தம் தொடர்பான யோசனை நேற்றிரவு வரை ஜனாதிபதிக்கு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நேரடியான கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது, அமைச்சு பதவிகளில் திறம்பட பணியாற்றதா மற்றும் முன்னேற்றங்களை காண்பிக்காத அமைச்சர்களுக்கு அவர்கள் வகித்த பதவிகளை மீண்டும் வழங்குவதில்லை என ஜனாதிபதியும் பிரதமரும் இணக்கத்திற்கு வந்துள்ளனர்.

மேலும் அமைச்சரவை மாற்றத்தின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முக்கிய அமைச்சு பதவிகள் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.