நிதி மற்றும் நாடாளுமன்ற அதிகாரங்களை கைப்பற்ற சதி செய்யும் பிரதமர்?

Report Print Aasim in அரசியல்

நிதி மற்றும் நாடாளுமன்ற அதிகாரங்களை கைப்பற்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க சதி செய்வதாக கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பு, பொரள்ளையில் நேற்று மாலை கூட்டு எதிர்க்கட்சியின் பொருளாதார ஆய்வுப் பிரிவு நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர், செயற்பாட்டுக் கடன் முகாமைத்துவ சட்டவரைபொன்றை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளது. அது அரசியல் அமைப்பு மற்றும் அடிப்படை உரிமைகளை மீறும் சட்டமூலமொன்றாகும்.

குறித்த சட்டமூலத்தின் பிரகாரம் மத்திய வங்கியிலிருந்து பத்துவீத நிதியை பிரதமர் தான் விரும்பிய விதத்தில் செலவிடலாம். அதற்கு எதிராக குற்றவியல் அல்லது சிவில் சட்டங்களின் பிரகாரம் வழக்குத் தொடர முடியாது.

இதன் மூலம் நிதி மற்றும் நாடாளுமன்ற அதிகாரங்களை சூழ்ச்சி செய்து கைப்பற்ற பிரதமர் சதி செய்கின்றார். இதற்கு கூட்டு எதிர்க்கட்சி ஒருபோதும் இடமளிக்காது.

குறித்த சட்டமூலத்தை எதிர்த்து விரைவில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.